Monday, July 17, 2023

 எவ்வளவு இனிப்பான செய்தி தெரியுமா? 

கலைஞர் நூலகத்தில் போட்டித் தேர்வர்களுக்கு தனித்தளம்; முப்பதாயிரம் நூல்கள்

ஆர்.பாலகிருஷ்ணன் IAS (ஓய்வு)



மதுரையில் இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் திறந்து வைத்த கலைஞர் நினைவு நூலகத்தின் நான்காவது தளத்தில் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணாக்கர்கள்,  இளைஞர்களுக்கு பயன்படும் வகையில் ஏறத்தாழ 30000 நூல்களுடன் கூடிய ஒரு தனிப்பகுதி அமைந்துள்ளது என்ற தகவல் அறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

அது 1983 ஆம் ஆண்டு. மதுரையில் தினமணி நாளிதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டே குடிமைப் பணிக்குத்  தயாராகி வந்தேன். 

மதுரையில் நத்தம் சாலைக்கு செல்லும் வழியில் மதுரை காமராசர் பல்கலைக்கழத்தின் நகர் நூலகச் சிறுவளாகம். எனது பணிச்சூழலில் அந்த நூலகம் மட்டுமே எனக்கு போக வர வசதியாக இருந்தது. அப்போது நத்தத்தில் இருந்து மதுரைக்கு தினமும் பயணித்து மூன்று ஷிப்டுகளில் மாறி மாறி பணியாற்றினேன். இதில் ஷிப்டை பொறுத்து வாரத்தில் ஓரிரு நாட்கள் நூலகம் செல்லமுடியும்.‌

நான் தமிழ் வழியில் தேர்வு எழுத முடிவுசெய்து  அதற்காகத் தயாராகி வந்தேன். அறிவியல், பொது அறிவு, வரலாறு போன்ற தேர்வுகளுக்கு பயன்படக்கூடிய நூல்கள் தமிழில் குறைவாகவே இருந்தன.  தமிழ்நாடு பாடநூல் நிறுவன வெளியீடுகள் மிகவும் உதவியாக இருந்தது. ஆங்கிலத்தில் நூல்களைப் படித்து தமிழில் குறிப்பெடுப்பேன். தமிழில் கலைச்சொற்களை துறைவாரியாக தயாரித்துக் கொண்டேன் தேர்வில் பயன்படுத்த வசதியாக.

குடிமைப் பணி தேர்வு எழதுவோர்க்கு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் நூல்கள் ( NCERT) பயனுள்ளதாக இருக்கும் என்றார்கள். மதுரை டவுன் ஹால் சாலையில் ஒரு கடையில் சில நூல்கள் கிடைத்தன. எனக்கு வேண்டிய நூல்கள் அனைத்தும் கிடைக்கவில்லை. 

இந்த நூல்களை வாங்கி வருவதற்காகவே சென்னைக்குச் சென்று புத்தகக்கட்டுடன் மறுநாள் மதுரைக்கு திரும்பிய ரயில் பயணம் மறக்கவில்லை.

குடிமைப் பணி தேர்வுக்கு படிப்பவர்கள் Competition Success Review என்ற மாதாந்திர இதழை வாங்கிப்படிப்பது வழக்கம். எனக்கு தெரிந்து இந்த இதழ் மதுரையில் இரண்டே இரண்டு கடைகளில் கிடைக்கும். அந்த இரண்டு கடைகளில் ஒன்று தல்லாகுளத்தில் தமுக்கம் மைதானம் சந்திப்பில் உள்ள ஒரு பெட்டிக்கடை. அந்த இதழ் வரும் நாளை எதிர்நோக்கி காத்திருந்து வாங்கிச் செல்வேன். சில தருணங்களில் குறிப்பிட்ட நாளில் அந்த மாத இதழ் வந்து சேர்ந்திருக்காது.‌ நாளைக்கு ஒருவேளை வரக்கூடும் என்பார் கடைக்காரர்.

எனக்குத் தேவையான ஒரு நூலைப் படிப்பதற்காக  ஒருமுறை காரைக்குடி அழகப்பா கல்லூரி நூலகம் சென்று காரைக்குடியில் ஒரு நாள் தங்கி குறிப்பெடுத்து வந்தேன். 

மற்றபடி எனக்கு உற்றதுணை யாதவர் கல்லூரி நூலகம்.‌ நான் அங்கு இளங்கலை படித்து பின்னர் பல்கலைக்கழகத்தில் முதுகலை படித்து பிறகு நாளிதழில் பணியாற்றினாலும் யாதவர் கல்லூரி தொடர்பு விட்டுப் போகவில்லை. எனக்கு தேவையான நூல்களை அங்கிருந்து வாங்கிச் சென்று படிக்க முடிந்தது.

அப்போது யாதவர் கல்லூரி நூலகத்தின் நூலகராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற திரு. முனியசாமியுடன் சென்ற ஆண்டு கூட அலைபேசியில் பேசினேன்.

இதையெல்லாம் இப்போது ஏன் சொல்கிறேன். ஏன் எழுதுகிறேன்.‌

கலைஞர் நூலகத்தில் போட்டித் தேர்வர்களுக்கு தனித்தளம்; முப்பதாயிரம் நூல்கள் என்பது எவ்வளவு இனிப்பான செய்தி தெரியுமா? 

இப்போதெல்லாம் விரல் நுனியில் இணைய வலைத்தளங்களில் தகவல் களஞ்சியம். ஆனால் அது வேறொரு காலம். திரும்பிப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது.‌ மகிழ்ச்சியாகவும் இருக்கிறது!

1984 இல் குடிமைப் பணியில் சேர்ந்து 2018 இல் ஓய்வுபெற்று அதன் பின்னரும் ஒடிசா மாநில அரசில் முதல்வர் அலுவலகத்தில் தலைமை ஆலோசகராக முழுநேரப் பணியில் இப்போதும்.

மதுரையில் கலைஞர் நினைவு நூலகத்தில் ஒரே தளத்தில் போட்டித் தேர்வர்களுக்கு பயன்படக்கூடிய முப்பதாயிரம் நூல்கள். அடேங்கப்பா . அப்படியென்றால் நூல்கள் வாங்க சென்னைக்கு போக வேண்டாமா? மாத இதழுக்காக கடை அருகே காத்திருக்க வேண்டாமா?

ஆசையாக இருக்கிறது! இந்த நான்காவது தளத்தில் அமர்ந்து படித்து இன்னும் ஒரு முறை குடிமைப்பணி தேர்வு எழுதி மீண்டும் ஒரு முறை முதல் முயற்சியில் வென்று காட்ட! அப்படி என்ன வயசாகி விட்டது எனக்கு 64+ தானே! ( Don't get tensed up. சும்மா தான் சொன்னேன்.!😂😂)

வாழ்த்துகள். இளைய தலைமுறையே!

கல்வி தான் நம்மைக் கரைசேர்க்கும்.‌  

அறிவு தான் நமது பேராயுதம்!


"அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்" என்று  ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் அன்று சொன்ன சொல் இன்றும் செல்லும்.


அன்புடன்

ஆர்.பாலகிருஷ்ணன் 

புவனேஸ்வரம் 

15.07.2023

Sunday, July 9, 2023

 ஏன் பொது சிவில் சட்டம் வேண்டாம் ?


பி.வில்சன்
நாடாளுமன்ற உறுப்பினர்

கடந்த 3ஆம் தேதி புதுடெல்லியில் சட்டம் மற்றும் நீதிக்கான நாடாளுமன்றக் குழுவின் கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக, பொது சிவில் சட்டம் தொடர்பாக சட்ட ஆணையமானது புதிய கலந்தாலோசனைகளை நடத்துவது எதிர்த்து இந்திய சட்ட ஆணையத்தின் மாண்புமிகு தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு ஒரு கடிதத்தை நான் சார்ந்த நாடாளுமன்றக் குழுவின் தலைவர் மாண்புமிகு திரு சுசீல் மோடி அவர்கள் வாயிலாக சமர்ப்பித்தேன்.

அக்கடிதத்தின் தமிழாக்கம் இங்கே...
**************************************
நாள் : 03.07.2023
பெறுநர்:
மாண்புமிகு தலைவர் & உறுப்பினர்கள்,
22வது இந்திய சட்ட ஆணையம்,
4வது தளம், லோக் நாயக் பவன்,
கான் மார்க்கெட்,
புதுதில்லி – 110003+.

வாயிலாக:
மாண்புமிகு தலைவர் அவர்கள்
பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள், சட்டம் மற்றும் நீதிக்கான பாராளுமன்ற நிலைக்குழு மாநிலங்களவை செயலகம்,
இந்திய பாராளுமன்ற வளாகம்
அறை எண் 415, பிளாக்– பி,
பாராளுமன்ற இணைப்பு விரிவாக்க கட்டிடம்
புதுதில்லி – 110001.

பொருள்: 31.08.2018 தேதியிட்ட பொது சிவில் சட்ட சீர்திருத்தம் குறித்த இந்திய சட்ட ஆணையத்தின் ஆலோசனை அறிக்கையின் அமலாக்கம் மற்றும் பரிந்துரைகளை செயல்படுத்துவது குறித்த கேள்விகள்!

22வது சட்ட ஆணையத்தின் மரியாதைக்குரிய மாண்புமிகு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு வணக்கம்!

14.06.2023 தேதியிட்ட பொது அறிவிப்பு தொடர்பாகவும், 31.08.2018 தேதியிட்ட இந்திய சட்ட ஆணையத்தின் பொது சிவில் சட்ட சீர்திருத்தம் குறித்த ஆலோசனை அறிக்கையின் அமலாக்கம் மற்றும் பரிந்துரைகள் தொடர்பாகவும் சில கேள்விகளை எழுப்ப நான் உங்களுக்கு இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

பொது சிவில் சட்டம் தொடர்பான விஷயங்களை ஆராயுமாறு ஒன்றிய சட்ட அமைச்சகம் 17.06.2016 அன்று சட்ட ஆணையத்திடம் முறைப்படி கோரியது குறிப்பிடத்தக்கது. இந்த வேண்டுகோளுக்கு இணங்க, 21-வது சட்ட ஆணையம் இரண்டு ஆண்டுகள் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணைகளை நடத்தியும், ஆலோசனைகளை மேற்கொண்டும், பொது சிவில் சட்டம் குறித்த தனது நிலைப்பாட்டையும் கருத்துக்களையும் முன்வைத்து 31.08.2018 தேதியிட்ட ஆலோசனை அறிக்கையை மிகுந்த சிரமத்திற்குப் பிறகு வெளியிட்டுள்ளது. அப்படி இருக்கும்போது, 22-வது சட்ட ஆணையம் 14.06.2023 தேதியிட்ட அறிவிப்பின் மூலம் பொது ஆலோசனையை மீண்டும் தொடங்குவது ஏன்?

ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான
21-வது சட்ட ஆணையத்தின் அறிக்கைக்கு அளிக்கப்படும் மதிப்பு இதுதானா?

ஒரு ஆலோசனை அறிக்கை வெளிடப்பட்டு பல தசாப்தங்கள் கடந்துவிட்டன, சமூகமும் சட்டங்களும் மாறிவிட்டன, அதனால் மறுபரிசீலனை தேவை என்பதை ஒருவர் புரிந்து கொள்ள முடியும். ஆனால், ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக ஆழமாக ஆய்வு செய்யப்பட்டு, ஐந்து ஆண்டுகளுக்கு முன்புதான் முந்தைய சட்ட ஆணையத்தால் விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்ட ஒரு விஷயத்தை மீண்டும் கையில் எடுப்பது விசித்திரமானது.

31.08.2018 தேதியிட்ட ஆலோசனை அறிக்கையின் அடிப்படையில் சட்ட ஆணையம் தனது அறிக்கையை இறுதி செய்வதே போதுமானதாக இருக்கும்.

தற்போது சட்ட ஆணையம் செய்யவிருக்கும் ஆலோசனைகள் என்பது, பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக இல்லாத 21 வது இந்திய சட்ட ஆணையத்தின் 31.08.2018 தேதியிட்ட ஆலோசனை அறிக்கையில் உள்ள கருத்துக்களை நீர்த்துப்போகச் செய்ய தற்போதைய ஆணையம் முயற்சிக்கிறது என்றே பொருள்படும்.

பொது சிவில் சட்டம் என்பது விரும்பத்தக்கது அல்ல

31.08.2018 தேதியிட்ட ஆலோசனை அறிக்கையில், 21வது சட்ட ஆணையமானது பொது சிவில் சட்டம் என்பது விரும்பத்தக்கது அல்ல என்ற கருத்தைத் தெரிவித்துள்ளது.

மேலும், கலாச்சார பன்முகத்தன்மை சமரசம் செய்யப்படக்கூடாது என்றும், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது பல தனிநபர்கள் சட்டத்தை முழுமையாகப் பயன்படுத்துவதைத் தடுக்கக்கூடும் என்றும் அடையாளம் காணப்பட்டது. இந்திய சட்ட ஆணையத்தின் முன்பு பரிசீலனைக்காக பல்வேறு பிரச்சனைகள் கிடப்பில் உள்ள நிலையில், பொது சிவில் சட்டம் தொடர்பாக முடிவுக்கு வந்த ஒரு பிரச்சினையை ஏன் மீண்டும் கையில் எடுக்கிறது?

இது 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசு விடுத்த அழைப்பின் பிரதிபலிப்பாகவே பார்க்கப்படுகிறது.

பொது சிவில் சட்டத்திற்கான அடிப்படை எதிர் கருத்துருக்கள்:

அடிப்படை உரிமைகள் என்ற சட்டப் பிரிவுகளின் ஒரு பகுதியாக இடம் பெறவில்லை

பொது சிவில் சட்டமானது மாநிலக் கொள்கையின் வழிகாட்டும் கோட்பாடுகளின் கீழ் வரும் பிரிவு 44-ன் கீழ் கொண்டு வரப்பட்டு, அரசியல் நிர்ணய சபைக்குள்ளேயே ஏற்பட்ட கடும் எதிர்ப்பு காரணமாகவே, அடிப்படை உரிமைகள் என்ற சட்டப் பிரிவுகளின் ஒரு பகுதியாக இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனென்றால் நாட்டின் பன்முகத்தன்மைக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய சட்டமானது செயல்படுத்தக்கூடிய விதியாக இருக்கக்கூடாது என்பதை அரசியலமைப்பு சபை அங்கீகரித்தது. மாநிலக் கொள்கை விதிகளின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் வலுக்கட்டாயமாக அமல்படுத்தக் கோருவது பேரழிவிற்கு வழிவகுக்கும் ஒரு செயலாகும்.

தனித்துவத்தையும் பன்முகத்தன்மையையும் அழித்துவிடும்

இந்தியா என்பது ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடாகும், வேறு எங்கும் இல்லாத வகையில் சமயம், கலாச்சாரம் மற்றும் மொழியியல் பன்முகத்தன்மையை உள்ளடக்கியது. நம் நாடு ஒரு அறிக்கையின்படி, இந்தியாவில் 398 மொழிகள் உள்ளன. அவற்றில் 387 மொழிகள் தீவிரமாக பேசப்படுகின்றன, 11 மொழிகள் வழக்கொழிந்து விட்டன.

இந்து மதத்திற்குள் கூட, பல துணை கலாச்சாரங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான அடையாளம், பாரம்பரியம் மற்றும் பழக்கவழக்கங்களைக் கொண்டுள்ளன. தனிமனிதச் சட்டங்களின் ஒரு தொகுப்பை எடுத்து, அதை அசுர பலத்துடன் அனைத்து மதங்களுக்கும், உட்பிரிவுகளுக்கும் பயன்படுத்தினால், அது அவற்றின் தனித்துவத்தையும் பன்முகத்தன்மையையும் அழித்துவிடும்.

ஒருவருடைய மதத்தின் சுதந்திரமான நடைமுறையில் தலையிடுகிறது

நான் மற்றொரு முக்கிய காரணியையும் முன்னிலைப்படுத்த விரும்புகிறேன். திருமணம் என்பது பெரும்பாலான மதங்களில் வெறும் சட்டப்பூர்வமாக ஒன்றுபடுவதற்கு மட்டுமல்ல. உதாரணமாக கிறித்துவத்தை எடுத்துக்கொண்டால், அதில் திருமணம் என்பது ஒரு புனித சடங்கு ஆகும். இது மதத்தின் ஒரு அம்சம், அதனால்தான் இது புனித திருமணத்தின் சடங்கு என்று அழைக்கப்படுகிறது. கத்தோலிக்க திருச்சபை குறிப்பிடும் வகையில் திருச்சபை உறுப்பினர்கள் முன்னிலையில் நியமிக்கப்பட்ட பாதிரியாரால் திருமணம் என்னும் புனிதமான சடங்கு நடைபெற வேண்டும்.

எனவே, பொது சிவில் சட்டம், பதிவாளர் போன்ற ஒரு அதிகாரியிடம் திருமணங்களை பதிவு செய்ய வழிவகை செய்கிறது என்றால், அது ஒரு புனித சடங்கை இழிவுபடுத்துகிறது என்று பொருள்படும். அதுமட்டுமல்லாமல், கிறிஸ்தவர்கள் திருமணத்திற்கு முன்பு திருச்சபையில் திருமண ஆலோசனை பெறும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். பொது சிவில் சட்டம் என்பது இந்த நடைமுறையின் முடிவாக இருக்கும். இறுதியில் பொது சிவில் சட்டமானது மத நடைமுறைகளை குறிவைப்பதோடு ஒருவருடைய மதத்தின் சுதந்திரமான நடைமுறையில் தலையிடுகிறது.

பெரும்பான்மை மதத்தினரின் மத சுதந்திரத்தையும் பறிக்கும்

இதில் வேடிக்கை என்னவென்றால், பொது சிவில் சட்டத்தை ஆதரிப்பவர்கள் அதை 'இந்து சார்பு சட்டம்' என்று பார்க்கிறார்கள், ஆனால் உண்மையில் அது இந்துக்களின் உரிமைகள் மற்றும் பழக்கவழக்கங்களுக்கும் தீங்கு விளைவிக்கும். தற்போது தமிழகத்தை தவிர இந்து திருமணத்திற்கு பதிவு செய்ய வேண்டும் என்பது தேவையில்லை. தாலி கட்டுவது (தமிழ்ப் பண்பாட்டில்) அல்லது அக்னியை ஏழு முறை சுற்றி வருவது என வழக்கமான நடைமுறையைப் பின்பற்றி இந்துக் கோயிலில் நடைபெறும் சம்பிரதாய சடங்குகளே திருமணத்திற்குப் போதுமான சான்றாகும்.

இத்தகைய வழக்கமான வகையிலான திருமணங்கள் இனி பொது சிவில் சட்டத்தால் அங்கீகரிக்கப்படாது. இனி ஒரு அதிகாரியிடம் பதிவு செய்யப்படும் திருமணங்களை மட்டுமே அங்கீகரிக்கும். எனவே, இறுதியாக, அத்தகைய சட்டம் இந்திய அரசியலமைப்பின் சட்ட பிரிவு 25 உத்தரவாதம் அளித்துள்ள மத சுதந்திரத்தை மீறும், இது சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல, பெரும்பான்மை மதத்திற்கும் பொருந்தும்.

பொது சிவில் சட்டத்தினால் இந்தியாவின் மதச்சார்பின்மை ஆபத்தில் உள்ளது

இரண்டாவதாக, பிரிவு 29 சிறுபான்மையினர் தங்கள் தனித்துவமான கலாச்சாரத்தைப் பேணிக்காக்கும் உரிமையைப் பாதுகாக்கிறது. பொது சிவில் சட்டமானது சிறுபான்மையினரின் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை அழித்துவிடும் என்ற நியாயமான அச்சம் உள்ளது. அந்த வகையில், சிறுபான்மையினரின் தனித்துவமான பாரம்பரியங்களையும் கலாச்சாரங்களையும் ஒரே தனிப்பட்ட சட்டத்தின் மூலம் துடைத்தெறியும் பொது சிவில் சட்டத்தினால் இந்தியாவின் மதச்சார்பின்மை ஆபத்தில் உள்ளது. இது இந்தியாவின் தனித்துவமான பன்முகத்தன்மையைப் பாதுகாக்கும் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பிற்கு எதிரானது.

சிறுபான்மை சமூகங்கள் தங்கள் தனித்துவத்தை பாதுகாக்க விரும்புகின்றன. அவை வேறுபட்டு இருக்க அனுமதிப்பதே மதச்சார்பின்மையின் உண்மையான நோக்கம் ஆகும். நான் மதச்சார்பின்மைக்கு எதிரானவன் அல்ல. மதச் சாயம் இல்லாத ஒரு பொதுவான சட்டத்தின் கீழ் சேர விரும்புபவர்கள், தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில், சிறப்புத் திருமணச் சட்டம், 1954 இன் கீழ் அவ்வாறு செய்ய ஏற்கனவே சுதந்திரம் அளிக்கப்பட்டு உள்ளனர். அதே போன்று நாத்திகர்கள் மற்றும் கலப்புத் திருமண தம்பதிகள் சிறப்புத் திருமணச் சட்டத்தைப் பின்பற்றலாம்.
இந்திய உச்ச நீதிமன்றமும் 'ஒன்றுபட்ட தேசம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டிய அவசியமில்லை' என்று திரும்பத் திரும்பக் கூறியுள்ளது.

"இந்தியாவின் முழு வரைபடமும் சிதைந்து, அழகு இழக்கப்படும்.”
- மாண்பமை உச்ச நீதிமன்றம்

டி.எம்.ஏ.பாய் அறக்கட்டளை vs கர்நாடக அரசு மற்றும் பலர் தொடர்பான வழக்கில், மாண்பமை உச்ச நீதிமன்றமானது இந்தியாவில் மதச்சார்பின்மையின் சாராம்சம் என்பது, பல்வேறு மொழிகள் மற்றும் பல்வேறு நம்பிக்கைகளைக் கொண்ட, பல்வேறு வகையான மக்களை அங்கீகரித்து பாதுகாப்பதும், அவர்களை ஒன்றிணைத்து ஒரு முழு ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்குவதே ஆகும் என்று கூறியுள்ளது. பின்வரும் சொற்றொடரானது வேற்றுமையில் ஒற்றுமை எனும் உணர்விற்கு அடித்தளமாக இருக்கிறது.

“158. ஒரு பில்லியன் மக்கள் தொகையைக் கொண்டுள்ள இந்தியாவானது 6 முக்கிய இனக்குழுக்கள், 52 பெரிய பழங்குடிகள், 6 பெரிய மதங்கள் மற்றும் 6,400 சாதிகள் மற்றும் துணை சாதிகள், 18 பெரிய மொழிகள் மற்றும் 1,600 சிறிய மொழிகள் மற்றும் கிளைமொழிகள் போன்றவற்றை உள்ளடக்கியது. இந்தியாவின் வரைபடமானது சமூகங்களாக வரையப்பட்டால், மேற்கூறிய 100 பில்லியன் மக்களும் அதன் சிறு சிறு துகள்களாக இருப்பார்கள் என்பதன் மூலம் இந்தியாவில் மதச்சார்பின்மையின் சாராம்சத்தை சிறப்பாக வெளிக்கொணர முடியும். ஒவ்வொரு நபருக்கும், அவரது மொழி, சாதி, மதம் எதுவாக இருந்தாலும், அவரது தனிப்பட்ட அடையாளம் உள்ளது, அது பாதுகாக்கப்பட வேண்டும், இதனால் அது ஒன்றிணைக்கப்படும்போது அது இந்தியாவின் வெவ்வேறு புவியியல் அம்சங்களுடன் ஒரு சித்தரிப்பாக மாறும். தனித்தனியாக ஒன்றுக்கொன்று வேறுபட்டிருக்கக்கூடிய இந்த சிறிய பளிங்குத் துண்டுகள், மனிதர்களின் வடிவத்தில், முறையான முறையில் ஒன்றாக வைக்கப்படும்போது, இந்தியாவின் அழகான வரைபடத்தை உருவாக்குகின்றன. ஒவ்வொரு துண்டுகளும், ஒரு இந்தியக் குடிமகனைப் போலவே, முழுமையான இந்தியாவை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு வரைபடத்தில் வண்ணங்களின் மாறுபாடுகளும், ஒரே நிறத்தில் உள்ள பல்வேறு நிறத்தன்மைகளும், பளிங்குக் கற்களின் வெவ்வேறு நிறத்தன்மைகள் மற்றும் வண்ணங்களின் விளைவாகும், ஆனால் ஒரு சிறிய பளிங்குத் துண்டு அகற்றப்பட்டால் கூட, இந்தியாவின் முழு வரைபடமும் சிதைந்து, அழகு இழக்கப்படும்.”

இந்து மதத்திற்குள் கூட, சில குழுக்கள் பொது சிவில் சட்டத்தை விரும்பவில்லை

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தேசத்தின் பன்முகத்தன்மையை அழித்துவிடும். மற்றொரு தவறான கருத்து என்னவென்றால், பொது சிவில் சட்டமானது சிறுபான்மையினரால் எதிர்க்கப்படுகிறது என்பதாகும். பொது சிவில் சட்டத்தை இந்து-முஸ்லிம் பிரச்சினையாக முன்னிறுத்தும் தவறான வழிநடத்தலுக்கு இது ஒரு உன்னதமான எடுத்துக்காட்டு. இந்து மதத்திற்குள் கூட, பழங்குடியினர் போன்ற சில குழுக்கள் பொது சிவில் சட்டத்தை விரும்பவில்லை.
உதாரணமாக, ராஷ்ட்டிரிய ஆதிவாசி ஏக்த பரிஷத் எனும் பழங்குடியின குழுவானது 2016ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தினை அணுகி பொது சிவில் சட்டத்தின் சாத்தியமான விளைவுகளில் இருந்து தங்கள் மரபுகள் மற்றும் கடுமையான நடைமுறைகளுக்கு பாதுகாப்பை நாடினர். பழங்குடியினரின் பழக்கவழக்கங்கள் தனித்துவமானவை மற்றும் அவை மற்ற இந்து பழக்கவழக்கங்களுடன் இணைக்க முடியாதவை.

மாநிலத்தின் சட்டமியற்றும் அதிகாரம் பற்றிய கவலைகள்:

சட்டம் இயற்றும் மாநிலத்தின் அதிகாரமும் ஒரு முக்கியமான விஷயம். திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை மற்றும் சொத்துரிமைகள் போன்ற விஷயங்கள் அரசியலமைப்பின் பொதுப்பட்டியலின் கீழ் வருகின்றன, இது ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை இந்த விஷயங்களில் சட்டங்களை இயற்ற அனுமதிக்கிறது. இருப்பினும், அரசியலமைப்பின் பிரிவு 44 பொது சிவில் சட்டமானது "இந்திய பிராந்தியம் முழுவதும் உள்ள குடிமக்களுக்கு" பொருந்தும் என்று வரையறுக்கிறது, எனவே, மாநிலங்களுக்கு அதை திருத்த அதிகாரம் இல்லை என்றும் கூறுகிறது.

இவை தவிர, பொதுப்பட்டியலில் உள்ள விஷயங்களுக்குக் கூட, ஒன்றிய அரசானது ஒரு சட்டத்தை இயற்றியவுடன், இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறாமல் மாநில அரசானது அத்தகைய சட்டத்தை மாற்ற முடியாது.

எனவே, ஒன்றிய அரசின் கைதான் மேலோங்கியிருக்கும், அது இயற்றும் பொது சிவில் சட்டமானது இந்தியா முழுமைக்குமான சட்டமானதாகவே இருக்கும். மாநில அரசு சட்டம் ஏற்றும் அதிகாரத்தை இழந்துவிடும்.

பொது சிவில் சட்டம் சம உரிமைகளைப் பாதுகாக்கிறது என்ற தவறான வழிகாட்டுதல்:

பொது சிவில் சட்டம் தொடர்பாக அதனை ஆதரிப்பவர்கள் முன்வைக்கும் வாதம் என்னவென்றால், பொது சிவில் சட்டம் பலதார மணம் போன்ற விரும்பத்தகாத நடைமுறைகளை அகற்றும் அல்லது பெண்களுக்கு சமமான சொத்துரிமை வழங்கிட வழிவகுக்கும் என்பதாகும். இதுவும் ஒரு அர்த்தமற்ற விவாதம் ஆகும்.

சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான சீர்திருத்தங்கள் என்று வரும்போது, தனிநபர் சட்டங்களிலேயே திருத்தங்களைச் செய்யலாம் – அதாவது தந்தை மற்றும் கணவரின் சொத்துக்களில் பெண்களுக்கு சம பங்கு வழங்குவதற்காக இந்து வாரிசுரிமைச் சட்டம் எவ்வாறு திருத்தப்பட்டதோ அதைப் போன்று திருமணம் போன்ற புனித நிகழ்வுகளில் இருந்து மதப் புனிதத்தை முற்றிலுமாக நீக்கி, அதை சொத்துப் பதிவு போல நடத்துவதையே நான் எதிர்க்கிறேன்.

பழங்குடியினரின் அரசியல் அமைப்பு பாதுகாப்பு சட்டம்
மற்றும் ஆறாவது அட்டவணைக்கு குந்தகம் விளைவிக்கும் பொது சிவில் சட்டம்

அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையானது அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் உள்ள பழங்குடியினப் பகுதிகளின் நிர்வாகம் தொடர்பான விதிகளைக் கையாள்கிறது. குடும்பச் சட்டத்தின் விவகாரங்களில் முழு சுயாட்சியை அனுமதிக்கும் விதிகள் உள்ளன, அவை தங்கள் சொந்த நடைமுறையைப் பின்பற்றி உள்ளூர் பஞ்சாயத்தால் தீர்மானிக்கப்படலாம். இவை அனைத்தும் பழங்குடியின மாநிலங்களில் உள்ள மக்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள் ஆகும்.

இந்திய அரசியலமைப்பின் 371 (A) முதல் (J) வரை மற்றும் ஆறாவது அட்டவணை யானது அசாம், நாகாலாந்து, மிசோரம் ஆந்திரா / தெலுங்கானா, அருணாச்சல பிரதேசம், கோவா மற்றும் கர்நாடகா ஆகிய சில மாநிலங்களுக்கு சில பாதுகாப்புகள் தொடர்பான சில பாதுகாப்புகளை வழங்குகிறது.

எனவே, பொது சிவில் சட்ட ஆலோசனைகள் என்பது இந்த மாநிலங்களுக்கும் குறிப்பாக தங்களுக்கென்று ஒரு வழக்கமான சட்டம் மற்றும் தீர்ப்பாயங்களைக் கொண்டுள்ள பழங்குடி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரசியலமைப்பு பாதுகாப்புகளுக்கு எதிரானது. பழங்குடியினருக்கு எதிராக இது மிக ஆபத்தானதாக முடியும்.

முடிவுரை

முடிவாக, பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பதற்குக் காரணம், அது திருமணம் போன்ற புனித சடங்குகளை இழிவுபடுத்துகிறது மற்றும் நம்பிக்கை கொண்டவர்களுக்கிடையே திருமணம் என்று வரும்போது இது மத நிறுவனங்களின் அதிகார வரம்பிற்குள் இருக்க வேண்டும். ஏற்கனவே, சிறப்புத் திருமணச் சட்டம், 1954-ல் உள்ளதைப் போல நாத்திகர்கள் அல்லது மதங்களுக்கு இடையேயான திருமணங்களுக்கு சிவில் சட்டங்களைப் பயன்படுத்தலாம். பொது சிவில் சட்டம் என்கிற கருத்து மேலோட்டமாகத் தோன்றினாலும், அது நமது பன்முகத்தன்மை வாய்ந்த சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய எதிர்மறையான தாக்கத்தை கவனத்தில் கொள்வது மிகவும் முக்கியமானது. மத சுதந்திரத்தைப் பாதுகாத்தல், கலாச்சார பன்முகத்தன்மையை மதித்தல் மற்றும் எதிர்பாராத விளைவுகளைத் தவிர்த்தல் போன்றவை கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
பொது சிவில் சட்டத்தை திணிப்பதற்குப் பதிலாக, விரும்பத்தகாத நடைமுறைகளைக் களைவதற்கு சமூகங்களுக்குள் உரையாடல், புரிதல் மற்றும் படிப்படியான சீர்திருத்தங்களை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இந்த வழிமுறைகளின் மூலம் தனிமனித உரிமைகள், சுதந்திரங்கள் மற்றும் மதநல்லிணக்கத்திற்கு இடையே சமநிலையை ஏற்படுத்த முடியும். அதேபோல், சட்டங்களை விட உரிமைகளில் சீரான தன்மையை நாம் இலக்காகக் கொள்ள வேண்டும்.

தனிநபர் சட்டங்களைத் திருத்துவதன் மூலம் பெண்களின் சமத்துவத்தைப் பாதுகாக்க நாம் எப்போதும் நடவடிக்கை எடுக்க முடியும். இவை ஏற்கனவே இந்தியாவின் 21 வது சட்ட ஆணையத்தால் வழங்கப்பட்ட மிகவும் தீர்க்கமான பரிந்துரைகள் ஆகும். இப்படியிருக்கும் பொழுது, 22வது சட்ட ஆணையமானது மக்களின் வரி பணத்தில் முழு நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்வதற்கும், நேரத்தை வீணடிப்பதற்கும் உண்டான காரணம் ஏதும் தற்பொழுது இல்லை.
கர்நாடக உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஹிஜாப் தடை குறித்த தீர்ப்பிற்கு பொதுமக்களின் எதிர்வினை குறித்து சட்ட ஆணையத்தின் மாண்புமிகு தலைவர் அவர்கள் நன்கு அறிந்திருப்பார்.

எனவே, ஆழமாக வேரூன்றிய மத நம்பிக்கையைக் கையாளும்போது, எடுத்தேன் கவிழ்த்தேன் என்கிற அணுகுமுறையைக் கடைப்பிடிக்க முடியாது, ஆனால் இரக்கம், புரிதல் மற்றும் பொறுமையுடன் செயல்பட வேண்டும் என்கிற அந்த அனுபவத்தை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்திய சட்ட ஆணையம் 31.08.2018 தேதியில் அளித்த பொது சிவில் சட்ட சீர்திருத்தம் குறித்த ஆலோசனை அறிக்கை தொடர்பாக பின்வரும் விவரங்களை எனக்கு வழங்குமாறு இந்திய சட்ட ஆணையத்தைக் கேட்டுக் கொள்கிறேன் .

• 31.08.2018 தேதியிட்ட ஆலோசனை அறிக்கைக்காக, ஆலோசனைகள், கூட்டங்கள், வினா நிரல்களை வெளியிடுதல் மற்றும் பலவற்றிற்காக இந்திய சட்ட ஆணையம் செய்த செலவு எவ்வளவு?

• 31.08.2018 தேதியிட்ட குடும்பச் சட்ட சீர்திருத்தம் குறித்த ஆலோசனை அறிக்கையின் விளைவாக கலந்தாய்வில் பங்கேற்ற பங்கேற்பாளர்கள், பதிலளித்தவர்கள் மற்றும் ஆலோசகர்களின் பட்டியல்.

• 31.08.2018 தேதியில் 21வது இந்திய சட்ட ஆணையத்தினால் வெளியிடப்பட்ட ஆலோசனை அறிக்கையில் குறிப்பிடப்பட்ட பல்வேறு பரிந்துரைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

எனவே, மாண்புமிகு 22-வது சட்ட ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்களின் பணம், வளங்கள் மற்றும் நேரம் வீணடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், மேற்கண்ட விவகாரத்தில் நீங்கள் எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்வதற்கு முன்பாக எனது சந்தேகங்களுக்கும் கவலைகளுக்கும் தீர்வு காணும் வகையில், நிலைக்குழுவுக்கு பொருத்தமான பதிலை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
பி.வில்சன்
நாடாளுமன்ற உறுப்பினர் (மாநிலங்களவை)
உறுப்பினர் – சட்டம் மற்றும் நீதிக்கான
நாடாளுமன்ற நிலைக்குழ.

Friday, June 23, 2023

 Unity of Opposition for Unity of India

Tamil Nadu CM's super good suggestions




For the unity of constructive political parties, DMK President
Mr.M.K.Stalin has put forward 6 super good suggestions.

1) State-level alliances should be formed by the constructive
political parties, under the leadership of the party which is strong in the particular state.

2) In the states where state-level alliances can not be formed,
seat-sharing arrangements can be achieved.

3) In the states where state-level alliances or seat-sharing
arrangements can not be formed, a common candidate of like minded parties can be achieved.

4) Post electoral alliance is a suicidal decision considering the
might of the destructive party opposing us.

5) A common minimum programme should be evolved by all the like minded parties which work for Progressive India.

6) An action committee should be formed to solve the issues arising and to achieve the unity of all constructive political parties.



Progressive Media Forum requests all constructive media persons of the country to make viral the super good suggestions of  Tamil Nadu CM.

Progressive Media Forum 
99400 90596

Wednesday, June 21, 2023

Know your worth

 



A father, before he died, said to his son: “This is the watch your grandfather gave me and this is more than 200 years old. Before I give it to you go to the watch shop on the first street, and tell him I want to sell it, and ask how much they offer”.

The son went and after several minutes, he came back to his father and said, "The watchmaker offers to pay $5 because it's old and has a lot of scratches.”

He then asked him to go to the coffee shop.
The son went and after an hour or so, he came back and said: “The coffee shop owner offers $5, father.”
“Go to the museum and show that watch”. He went ahead and then came back happily. “They offered me a million dollars for this piece.”
The father said: “I wanted to let you know that the right place values your value in a way right, don't put yourself in the wrong place and get angry if you get treated like trash. Those who knows your value are the ones who appreciates you, don't ever stay in a place that doesn't suit you."
Know your worth.

Tuesday, June 13, 2023

LIVING FOREVER
- NANOBOTS to make humans IMMORTAL



'Immortality with the help of age reversing nanobots may be as far as just seven years away' says a former Google programmer.

According to him, humans will be able to achieve immortality in the next 8 years, all thanks to AI, Brain-Computer Interfaces and nano implants that attack specific viruses and bacteria and other ailments of the human body.

Age-reversing nanobots

Ray Kurzweil, a former Google programmer spoke about the advancements in genetics, nanotechnology, and robotics, which he thinks will lead to age-reversing ‘nanobots.’ These small machines will fix damaged cells and tissues that deteriorate as we age, making us resistant to diseases such as cancer.

The prediction that such an accomplishment will be accomplished by 2030 have been met with both enthusiasm and doubt, as curing all fatal illnesses appears to be a long way off from a permanent and practical cure.

Who is Ray Kurzweil?



Ray Kurzweil, recruited by Google in 2012 to “work on new projects involving machine learning" became famous for his scientific predictions, because 86 per cent of his 147 forecasts have come true.

The 75 year old Ray Kurzweil predicted in 1990 that the world’s greatest chess champion would be defeated by a computer by 2000, and it occurred in 1997 when Deep Blue defeated Gary Kasparov.  

In 1999, Kurzweil made another shocking prediction: by 2023, a $1,000 laptop would have the processing ability and storage space of a human brain.

Now, the former Google engineer thinks that technology will become so powerful that it will allow humans to live eternally, a phenomenon known as Singularity. Kurzweil prophesied that AI will clear the Turing test in 2029. It measures a machine’s capacity to show intelligent behaviour that is comparable to a person. 

What are Nanobots?



Nanobots are tiny robots, 50-100 nm wide, currently used in research as DNA probes, cell imaging materials, and cell-specific delivery vehicles. Nanobots are currently disrupting the biomedicine sector, with developments in cancer diagnosis and drug delivery.

Recent research has helped to establish nanorobots that are less than 1 mm in length and constructed of 500-1000 living cells. They have been created in a variety of basic shapes, including some with legs. Studies have shown they can effectively move linearly or circularly, join with other xenobots to act collectively, move tiny objects, and live for around 10 days.

How will humans reach mortality?



Contrary to popular belief, Kurzweil thinks that implanting computers in our minds will benefit us. He argues that by the second decade of the 21st Century, we have become used to organs grown in laboratories, genetic surgery and designer babies.

"We are going to get more neocortex, we’re going to be funny, we’re going to be better at singing. We are going to embody all of the qualities that we appreciate in humans to a larger extent" he argues.

The scientist talks about the claim made in his 2005 book 'The Singularity Is Near' where he predicted that technology will allow humans to enjoy an everlasting life by 2030.

"We will soon have nanobots running through our veins. Nanorobots will also help fend off ageing and illness, and repair human bodies on a cellular level" he declares. 

Monday, June 12, 2023

TOP 6 DETOX FOODS



Detoxification — or detox — is a popular buzzword. It typically implies following a specific diet or using special products that claim to rid your body of toxins, thereby improving health and promoting weight loss.

Detox diets are said to eliminate toxins from your body, improve health, and promote weight loss. Try to use the following detox foods that have vitamins, minerals and other detoxing components.

LEMON


Lemons are a staple of many detox diets. Firstly, lemons are packed with antioxidant vitamin C, which is great for the skin and for fighting disease-forming free-radicals. Furthermore, the citrus fruit has an alkaline effect on the body, meaning that it can help restore the body's pH balance, benefitting the immune system. Try starting your day with hot water and a slice of lemon to help flush out toxins and cleanse your system

GINGER



If too much fatty food has caused problems for your digestive system, it may be worthwhile adding some ginger to your diet. Ginger is not only great for reducing feelings of nausea, but it can help improve digestion, beat bloating and reduce gas. In addition to this, ginger is high in antioxidants and is good for boosting the immune system. To give your digestion a helping hand, try sipping on ginger tea or adding some freshly grated ginger to a fruit or vegetable juice

GARLIC



Garlic has long been known for its heart benefits, however the pungent food is also good at detoxifying the body. Garlic is not only antiviral, antibacterial and antibiotic, but it contains a chemical called allicin which promotes the production of white blood cells and helps fight against toxins. Garlic is best eaten raw, so add some crushed garlic to a salad dressing to boost its flavour and your health at the same time. 

TURMERIC



Turmeric, also known as the queen of spices, is often regarded as one of the best nutritional supplements. The herb’s properties range from antioxidant, antibacterial, antifungal, antiviral, to anti-carcinogenic and anti-inflammatory. It has in abundance nutrients such as dietary fiber, protein, calcium, copper, iron, magnesium and zinc, with vitamins C, E and K. You can start your day with this lemon ginger turmeric tea! A homemade detox tea recipe; supports a healthy immune system and digestive system.

HONEY


Honey has been used as a sweetener and medicine for thousands of years. It’s a complex liquid that may have as many as 181 components, like vitamins, minerals, amino acids, antioxidants, and more.
In lab studies, it’s been found to have strong activity against different bacteria. More studies are needed to find if it does the same in people. Honey is high in antioxidants. Honey is high in phenolic acids and flavonoids, which have antioxidant activity. This helps protect you against some types of cell damage.

FRESH FRUITS


Fresh fruits are high in vitamins, minerals, antioxidants and fibre and are also low in calories, making them an important part of a detox diet. If you're after brighter eyes and skin, shinier hair and improved digestion, try boosting your intake of fruit and eating from a wide variety of different kinds. The good news is fruit is easy to add to your diet, so try starting your day with a fresh fruit salad or smoothie and snacking on pieces of fruit throughout the day

Sunday, June 11, 2023

Definite Chief Aim 

Arnold Schwarzenegger's classic story



Creating a Definite Chief Aim for yourself is a way to supercharge yourself to achieve great success which you never dreamt before. The term, Definite Chief Aim, comes from the success philosophy of Napoleon Hill. We can learn this in detail from his powerful books, The Law of Success (1928) and Think and Grow Rich (1937).



He says strongly held Definite Chief Aim transforms your mind into a powerful magnet which attracts the people and circumstances necessary to accomplish your desire. Napoleon Hill wrote with 100 percent confidence: “I don’t know why it is that when a man decides what he wants, the whole universe seems to come to his aid to see that he gets it.”

There are hundreds of success stories which prove the words of Napoleon Hill.


100 Ways to Motivate Yourself

-


In his amazing book ‘100 Ways to Motivate Yourself’, journalist and motivational speaker Steve Chandler narrates about his first interview with Arnold Schwarzenegger which happened several years back.

“Arnold Schwarzenegger was not famous yet in 1976 when he and I had lunch together at the Doubletree Inn in Tucson, Arizona. Not one person in the restaurant recognized him. He was in town publicizing the movie Stay Hungry, a box-office disappointment he had just made. 

I was a sports columnist for the Tucson Citizen at the time. My assignment was to write a feature story about him for our newspaper’s Sunday magazine. And although I took to it with an uninspired attitude, it was one I’d never forget.

Perhaps the most memorable part of that day with Schwarzenegger occurred when we took an hour for lunch. I had my reporter’s notebook out and was asking questions for the story while we ate. At one point I casually asked him, “Now that you have retired from bodybuilding, what are you going to do next?”

With a voice as calm as if he were telling me about some mundane travel plans, he said, “I’m going to be the number-one box-office star in all of Hollywood.”

Mind you, this was not the slim, aerobic Arnold we know today. This man was pumped up and huge.

I tried not to show my shock and amusement at his plan. After all, his first attempt at movies didn’t promise much. And his Austrian accent and awkward, monstrous build didn’t suggest instant acceptance by movie audiences. I finally managed to match his calm demeanor, and I asked him just how he planned to become Hollywood’s top star.

“It’s the same process I used in bodybuilding,” he explained. 

“What you do is create a vision of who you want to be, and then live into that picture as if it were already true.”

 It sounded ridiculously simple. Too simple to mean anything. But I wrote it down. And I never forgot it.





I’ll never forget the moment when some entertainment TV show was saying that box office receipts from his second Terminator movie had made him the most popular box office draw in the world. 

Over the years I’ve used Arnold’s idea of creating a vision as a motivational tool. I’ve also elaborated on it in my corporate training seminars.

He did not say that you wait until you receive a vision. You create one. In other words, you make your own definite chief aim.”

Moral of the story 
-------------------
Decide upon your Definite Chief Aim and write it down in your diary. Once you’ve decided upon your Definite Chief Aim, all of your decisions and actions align with your major purpose. The next step is to develop a white hot heat of desire for it. Become obsessive. Think about it night and day.  You will achieve it.